அமெரிக்கா
இந்தியாவை அமெரிக்காவைப்போல் முன்னேற்ற வேண்டுமென்றால், முதலில் அமெரிக்க நிறுவனங்கள் நம்மை சுரண்டுவதை நிறுத்த வேண்டும். அடுத்து ஈராக், ஆப்கானில் அமெரிக்கா செய்துவரும் வேலையை பிறநாடுகள் மீது இந்தியாவும் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக, அமெரிக்கர்களுக்கு வேலை செய்வதற்கென்றே பிள்ளைகளை பெற்று,அவர்களுக்கு பயிற்சியளித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியர்களைப் போன்ற ஓர் இனத்தை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
5 ஏக்கர் நிலத்தில் அல்லும் பகலும் பாடுபடும் விவசாயியின் ஆண்டு வருமானத்தை விட விவசாயத்திற்கு பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் வாட்ச்மேனின் ஆண்டு வருமானம் அதிகம். பொருளைவிட, பொருளை சந்தைப்படுத்துகிறவனுக்கு உள்ள மதிப்பு, அமெரிக்காவின் உலகமயமாக்கல் அளித்த கொடை.
இப்படி முன்னேற்றமும் வசதிகளும் உழைப்பவனுக்கு எதிர்திசையில் சென்று கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் உழைப்பை தூக்கிப் பிடிப்பதும் ஒரு மோசடியே!
1 Comments:
உழைப்பை தூக்கி பிடிப்பது யார்? புரியவில்லை. இந்தியாவா? நிச்சயம் இல்லை. இந்தியாவை அமெரிக்கா போல் முன்னேறச் சொன்னது யார்? அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டு இந்தியாவை முன்னேற்ற சொன்னது யார்? நீங்கள் புரிந்து கொண்டது தவறு என்பது என் கருத்து. இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்பது தான் நமது அனைத்து முயற்சியுமாக இருக்கிறதே தவிர நீங்கள் நினைப்பது போல் அல்ல. இந்தியாவை அமெரிக்காவைப் போல் ஆக்க நினைத்தால் நம்மால் ஒரு அடி கூட முன்னேற முடியாது என்பதை உணராதவர்கள் அல்ல நம் சமுதாய பொறுப்பாளர்கள்.
Post a Comment
<< Home